1. Home
  2. தமிழ்நாடு

தமிழ்நாடு ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் - ஒன்றிய அரசு விளக்கம்..!!

தமிழ்நாடு ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் - ஒன்றிய அரசு விளக்கம்..!!


குடியரசு தின விழாவில் தமிழ்நாடு ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது. இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள்ளது. ஒன்றிய அரசு கூறியிருப்பதாவது, “எந்தெந்த மாநிலங்களின் ஊர்திகள் பங்கேற்க வேண்டும் என்பதை ஒன்றிய அரசு முடிவு செய்வதில்லை. மாநிலங்கள் மற்றும் ஒன்றிய அமைச்சகங்களிடமிருந்து பெறப்பட்ட 56 பரிந்துரைகளில் 21 மட்டுமே தேர்வு செய்யப்பட்டன.

தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் முன்மொழிவுகள் உரிய விவாதங்களுக்குப் பிறகே நிபுணர் குழு நிராகரித்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like