1. Home
  2. தமிழ்நாடு

ஒரே ஒரு திருக்குறளை மட்டும் சொல்லிவிட்டு, தமிழகத்தை அதோடு விட்டு விட்டார் மத்திய நிதி அமைச்சர் - நிர்மலா சீதாராமன்..!

Q

மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்படுவதை கண்டித்து, திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில், நேற்று முன்தினம் இரவில் பொதுக்கூட்டம் நடந்தது. அதில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பேசியதாவது:
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தபோது, 'வானோக்கி வாழும் உலகெலாம் மன்னவன் கோல்நோக்கி வாழும் குடி' என்ற திருக்குறளை வாசித்தார். அவருக்கு, 'பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நுாலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை' என்ற திருக்குறளை நினைவுபடுத்துவோம்.
பா.ஜ., அரசின் மத்திய பட்ஜெட்டில், தமிழகத்துக்கு நிதி ஒதுக்காமல், தமிழகத்தின் முக்கிய திட்டங்களை புறக்கணித்துள்ளார். திருச்சியில் படித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஒரே ஒரு திருக்குறளை மட்டும் சொல்லிவிட்டு, தமிழகத்தை அதோடு விட்டு விட்டார். தேர்தலை மனதில் வைத்து, மத்திய பட்ஜெட் சமர்ப்பித்துள்ளனர்.
எந்தெந்த மாநிலம், பா.ஜ.,வுக்கு ஓட்டளிக்காமல் ஒதுக்கியது என்பதை கண்டறிந்து, அந்த மாநிலங்களை எல்லாம் வஞ்சிக்கும் வகையில், பட்ஜெட்டில் நிதி ஒதுக்கவில்லை. இது, மத்திய பட்ஜெட் அல்ல; ஓரவஞ்சனை பட்ஜெட்.
இவ்வாறு அவர் பேசினார்.

Trending News

Latest News

You May Like