1. Home
  2. தமிழ்நாடு

'மத்திய பட்ஜெட், டில்லி தேர்தலை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டது - ப. சிதம்பரம் விமர்சனம்..!

Q

முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் பேசியதாவது:
மத்திய பட்ஜெட், டில்லி சட்டசபை தேர்தலை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. நிதிப் பற்றாக்குறையை மேம்படுத்துவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறி வருகிறார். ஆனால், மத்திய அரசின் மூலதனச் செலவுகள் மற்றும் மாநிலங்களுக்கான மானிய உதவிகளைக் குறைத்துள்ளார். இது, மோசமான பொருளாதார நிர்வாகம்.
பட்ஜெட்டுக்குப் பின்னால் ஒரு உயரிய கருத்து இருக்க வேண்டும். ஆனால் இந்த பட்ஜெட்டில் அப்படி ஒன்றையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
நான் அவ்வாறு கண்டுபிடிக்க முயற்சிக்க மாட்டேன்.
ஏனென்றால் பட்ஜெட் உரை மற்றும் பட்ஜெட் கணக்குகளை படித்த பிறகு, பட்ஜெட்டுக்குப் பின்னால் எந்த ஒரு கருத்தும் இல்லை என்று நான் நம்புகிறேன்.
இவ்வாறு ப.சிதம்பரம் பேசினார்

Trending News

Latest News

You May Like