1. Home
  2. தமிழ்நாடு

நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல்..! இயற்கை விவசாயத்தில் 1 கோடி பேர் ஈடுபடுத்த திட்டம்..!

1

நாட்டில் விலைவாசி கட்டுக்குள் உள்ளது..பெண்கள் ஏழைகளுக்கு முன்நிறைமை வழங்கப்பட்டு வருகிறது.ஏழைகள் பெண்கள் இளைஞர்கள் விவசாயிகள் மையப்படுத்தி பட்ஜெட் தயாரிப்பு.4 கோடி இளைஞர்கள் வேலைவாய்ப்பு திறன் பயிற்சி அளிக்கப்படும்  

  • நாட்டின் பொருளாதார வளர்ச்சி வரும் காலங்களிலும் சிறப்பானதாக இருக்கும்
  • 80 கோடி மக்களுக்கு உணவு தானியம் வழங்கும் திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது
  • வேலை வாய்ப்பு ,கல்வி மற்றும் திறன் மேம்பாட்டிற்கு 1.48 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு
  • அடுத்த 2 ஆண்டுகளில் ஒரு கோடி விவசாயிகளை இயற்கை விவசாயத்தில் ஈடுபடுத்த திட்டம் 
  • 4.1 கோடி இளைஞர்களுக்காக 5 சிறப்பு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன 
  • கடுகு, நிலக்கடலை, சூர்யா காந்தி உற்பத்தியை அதிகரிக்க சிறப்பு திட்டம் 
  • விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த துறைக்கான நிதி கூடுதலாக ரூ.27,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 2023 – 24 பட்ஜெட்டில் விவசாயத்துறைக்கு 1,25,036 ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் 2024 -25 பட்ஜெட்டில் 1,52,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • வேளாண் துறைக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்படும் என்றும், வேளான் துறை மற்றும் அது சார்ந்த துறைகளுக்கு சேர்த்து ரூ.1.52 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்து அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
  • 3 முக்கிய திட்டங்களுக்கு 2 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கல்வி, வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு நடவடிக்கைகளுக்கு ரூ.1.48 லட்சம் கோடி ஒதுக்கீடு. நாட்டின் பணவீக்கம் தொடர்ந்து குறைந்து 4 சதவீதம் என்ற இலக்கில் இருக்கும் – நிர்மலாக சீதாராமன்.
  • உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு ரூ.10லட்சம் வரை கடன் உதவி வழங்க திட்டமிட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

Trending News

Latest News

You May Like