1. Home
  2. தமிழ்நாடு

கோயில்களில் புகுந்து அம்மன் தாலிகளை திருடிய பெண்- ஆடிப்போன தென்காசி..!!

tenkasi
கோயிலுக்குள் சாமி கும்பிடுவது போல புகுந்து அடுத்தடுத்து இரண்டு அம்மன் தாலிகளை திருடிச் சென்ற பெண்ணை ஒட்டுமொத்த தென்காசி காவல்துறையும் தீவிரமாக தேடி வருகிறது.

தென்காசி மாவட்டத்தில் இருக்கும் மாவடிக்கால் காளியம்மன் கோயில் மிகவும் பிரசித்திப் பெற்றதாக உள்ளது. கடையநல்லூர் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் பலருக்கும் இதுதான் காவல் தெய்வமாகவும் உள்ளது.

ஆடி மாதம் வரை நிறை பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டுச் சென்றனர். தற்போது ஆவணி மாதம் என்பதால், பக்தர்கள் விசேஷ நாட்களில் மட்டும் வருகின்றனர். அந்த கோயிலுக்கு பக்கத்திலேயே இருக்கும் கங்கை அம்மன் கோயிலும் அப்பகுதியில் பிரபலமாகவே உள்ளது.

வழக்கமான பூஜை நடைமுறைக்காக கோயிலுக்கு வந்த பூசாரி, 10 மணிக்கு மேல் புஷ்ப கைங்கரியத்துக்காக வெளியே சென்றுள்ளார். அப்போது கோயிலில் யாருமே இருக்கவில்லை. அந்நேரத்தில் கோயிலுக்குள் வந்த பெண் ஒருவர், யாருமில்லாமல் பார்ப்பதை பார்த்து கருவறைக்குள் போய்விட்டார்.

அங்கு அம்மன் சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த தாலியை அவர் திருடியுள்ளார். அந்த கோயிலில் இருந்து வெளியேறிய அவர், அருகில் இருக்கும் கங்கை அம்மன் கோயிலுக்குள் சென்று, அங்கேயும் அம்மன் கழுத்தில் இருந்த தாலியை திருடியுள்ளார். உடனடியாக அப்பகுதியில் இருந்து அவர் தலைமறைவாகிவிட்டார்.

அம்மன் கழுத்தில் தாலி இல்லாதது குறித்து தெரியவந்ததும், கோயில் பூசாரி காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். அதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறை, கோயில்கள் இருக்கும் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி கேமரா காட்சிகளை வைத்து ஆய்வு செய்தனர். 

அதில் பெண் ஒருவர் பேருந்தில் இருந்து மாவடிக்கால் வந்துள்ளார். கையில் காய்கறி கூடையுடன் சிறந்த பக்திமானாக காட்சித் தரும் அந்த பெண், ரூ. 60 ஆயிரம் மதிப்புடைய தாலியை திருடியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரை ஒட்டுமொத்த தென்காசி போலீசாரும் வலைவீசி தேடி வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like