1. Home
  2. தமிழ்நாடு

சற்றும் எதிர்பார்க்காத காமெடி நடிகர்..!மகளின் திருமணத்திற்கு அழைக்க வந்த நடிகர் கிங்காங்கிற்கு பட வாய்ப்பு கொடுத்த டி.ராஜேந்தர்!

Q

நடிகரும் இயக்குநருமான டி. ராஜேந்தரை தனது மகள் திருமணத்துக்காக அழைக்க சென்ற நடிகர் கிங்காங்கிற்கு புதுப்பட வாய்ப்பையும் டி. ராஜேந்தர் வழங்கிய வீடியோ ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
பிரபல காமெடி நடிகர் கிங்காங் டி ராஜேந்தரை நேரில் சந்தித்து தன் மகளின் திருமண அழைப்பிதழை வழங்கி உள்ளார். வரும் ஜூலை 10ஆம் தேதி அசோக் பில்லர் அருகே உள்ள பிரம்மாண்டமான திருமண மண்டபத்தில் நடிகர் கிங்காங் மகள் திருமணம் நடைபெற உள்ளது.
அவருடைய மூத்த மகள் கல்லூரி படிப்பை படித்து முடித்த நிலையில் வருகின்ற ஜூலை 10-ம் தேதி திருமணம் செய்து வைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ள கிங்காங் சினிமா பிரபலங்களை நேரில் சந்தித்து தன் மகளின் திருமண அழைப்பிதழை வழங்கி வருகின்றார். சமீபத்தில் கூட பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமாரை பெங்களூரில் உள்ள அவருடைய இல்லத்திற்குச் சென்று சந்தித்து குடும்பத்துடன் அழைப்பிதழை கொடுத்து திருமணத்திற்கு அழைப்பு விடுத்தார்.
தன்னுடைய மகள் திருமணத்திற்காக அழைப்பிதழ் வழங்க வந்த கிங்காங்கை பார்த்து சந்தோஷப்பட்ட டி ராஜேந்தர் சிறுவயதிலிருந்தே உன்னோட நடிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும் ராஜா, இப்போ நான் ஒரு படம் பண்ண போறேன் அதில் ஒரு சிறிய கேரக்டர் உனக்கு தருகிறேன் நடிக்கிறியா என்று கேட்டதும் கண்டிப்பாக பண்றேன் என்று மகள் திருமணத்திற்கு அழைப்பு விடுக்கச் சென்ற இடத்தில் சிம்பு அப்பா படத்தில் நடிக்கும் வாய்ப்பை கிங்காங் பெற்று வந்துவிட்டார். இதனைத் தொடர்ந்து அவருக்கு ரசிகர்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

Trending News

Latest News

You May Like