1. Home
  2. தமிழ்நாடு

செஞ்சிக் கோட்டைக்கு UNESCO அங்கீகாரம்..!

1

தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில், கும்பகோணம் ஐராவதேஸ்வரர் கோயில், ஜெயகொண்டம் கங்கை கொண்ட சோழபுரம் கோயில், மாமல்லபுரம் நினைவுச் சின்னங்கள், நீலகிரி மலை ரயில் பாதை ஆகிய ஐந்தும் தமிழ்நாட்டில் யுனெஸ்கோ அங்கீகரித்த உலக பாரம்பரிய சின்னங்களாகும். இந்தப் பட்டியலில் ஆறாவது சின்னமாக செஞ்சிக் கோட்டை இடம் பிடித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் அமைந்துள்ள செஞ்சிக்  கோட்டையை பல்லவர்கள் வழி வந்த காடவ மன்னன் செஞ்சியர் கோன் காடவன் கட்டியதாகவும், இடையர் குலத்தைச் சார்ந்த அனந்தக்கோன் என்பவர் கட்டியதாகவும் இருவேறு கருத்துகள் உள்ளன. 1190ம் ஆண்டு தொடங்கி, ஆயிரத்து 240ம் ஆண்டில் கோட்டை கட்டி முடிக்கப்பட்டதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த கோட்டையானது இந்தியாவிலுள்ள எவரும் உட்புகமுடியாத கோட்டைகளுள் சிறந்ததாக அரண் செய்யப்பட்டுள்ளது என, மராத்திய மன்னரான சிவாஜியாலேயே பாரட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இயற்கையோடு ஒன்றிய மூன்று பெரிய மலைகள், இரண்டு சிறிய குன்றுகள் 12 கி.மீ., நீளமுள்ள மதில் சுவர்களால் செஞ்சிக்கோட்டை முக்கோண வடிவத்தில் அமைந்துள்ளது. இதனால், பல போர்களை கண்டபிறகும் கூட கம்பீரமாக காட்சியளித்து சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் கவர்ந்து வருகிறது.


 கோட்டையை பல்லவர்கள் வழி வந்த காடவ மன்னன் செஞ்சியர் கோன் காடவன் கட்டியதாகவும், இடையர் குலத்தைச் சார்ந்த அனந்தக்கோன் என்பவர் கட்டியதாகவும் இருவேறு கருத்துகள் உள்ளன. 1190ம் ஆண்டு தொடங்கி, ஆயிரத்து 240ம் ஆண்டில் கோட்டை கட்டி முடிக்கப்பட்டதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த கோட்டையானது இந்தியாவிலுள்ள எவரும் உட்புகமுடியாத கோட்டைகளுள் சிறந்ததாக அரண் செய்யப்பட்டுள்ளது என, மராத்திய மன்னரான சிவாஜியாலேயே பாரட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இயற்கையோடு ஒன்றிய மூன்று பெரிய மலைகள், இரண்டு சிறிய குன்றுகள் 12 கி.மீ., நீளமுள்ள மதில் சுவர்களால் செஞ்சிக்கோட்டை முக்கோண வடிவத்தில் அமைந்துள்ளது. இதனால், பல போர்களை கண்டபிறகும் கூட கம்பீரமாக காட்சியளித்து சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் கவர்ந்து வருகிறது.


செஞ்சிக் கோட்டைக்கான அரணாக கிருஷ்ணகிரி அல்லது ராணிக்கோட்டை, சக்கிலிதுர்கம் அல்லது சந்திரகிரி, ராஜகிரி ஆகிய குன்றுகள் இயற்கையாகவே உள்ளன. இந்த குன்றுகளை இணைக்கும் விதமாக இவற்றுக்கு இடையில் 20 மீட்டர்கள் அகலம் கொண்ட கீழ்க்கோட்டை கட்டபட்டுள்ளது. இந்தக் கீழ் கோட்டையில் ஒரு பள்ளிவாசல், வெங்கட்ரமணசாமி கோவில் போன்றவை உள்ளன. ராஜகிரியின் உச்சியில் அரங்கநாதர் கோயில் கட்டபட்டுள்ளது. ராஜகிரியில் போர் முற்றுகைக்காலத்தில் எதிரிகள் உள்ளே நுழையாதவாறு தடுக்கும் இழுவைப்பாலம் உள்ளது. போர்காலத்தில் கோட்டைக் காவலர்கள் இந்த பாலத்தை அகற்றிவிடுவர் அப்போது எதிகள் உள்ளே நுழைய இயலாமல் திண்டாடுவர். இதன் காரணமாகவே, நாட்டின் மிகவும் பாதுகாப்பான கோட்டைகளில் ஒன்றாக செஞ்சிக் கோட்டை கொண்டாடப்படுகிறது. 


 

Trending News

Latest News

You May Like