1. Home
  2. தமிழ்நாடு

பிரதமர் மோடியின் ஆட்சியில் அனைத்து மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது..!

Q

டிடி தமிழ் தொலைக்காட்சி அலுவலகத்தில் நடைபெற்ற “இந்தி” தின விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் ஆர்.என்.ரவி பேசியதாவது: இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளும் கொண்டாடப்பட வேண்டிய மொழிகள்தான். இந்தி திணிக்கப்படவில்லை. தமிழக மக்களிடையே, இந்தி மொழியைக் கற்க வேண்டும் என்ற எண்ணம் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளாகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்றுள்ளேன்.இந்தி மொழியை மக்கள் கற்கின்றனர்.
பிரதமர் மோடியின் ஆட்சியில் அனைத்து மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலிருந்து தமிழ்நாட்டை பிரிக்கக் கடந்த 50 ஆண்டுகளில் பல முறை முயற்சி நடந்துள்ளது. இந்தியாவை பிரிக்க நினைக்கும் முயற்சி ஒருபோதும் நிறைவேறாது. தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் சமஸ்கிருதம் நீக்கப்பட்டுள்ளது” இவ்வாறு அவர் பேசினார்.

Trending News

Latest News

You May Like