அக்காவை மிரட்டி தங்கையை சீரழித்த மாமா.. கர்ப்பிணியான இளம்பெண் !!

அக்காவை மிரட்டி தங்கையை சீரழித்த மாமா.. கர்ப்பிணியான இளம்பெண் !!

அக்காவை மிரட்டி தங்கையை சீரழித்த மாமா.. கர்ப்பிணியான இளம்பெண் !!
X

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி அருகுவிளை பகுதியில் 19 வயதான இளம்பெண் பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் உடல்நிலை சரியில்லை என கூறி வேலைக்கு செல்லாமல் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

அப்போது அப்பெண்ணின் சகோதரியின் கணவர் வீட்டிற்கு வந்துள்ளார். உடல்நிலை சரியில்லாதது குறித்து விசாரிப்பது போன்று பேச்சுகொடுத்துள்ளார். அக்காள் கணவர் என அப்பெண்ணும் சாதாரணமாக பேசியுள்ளார்.

பின்னர் வீட்டில் யாரும் இல்லாததை உறுதி செய்த அவர் இளம்பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் இதை வெளியே கூறினால் உனது அக்காவை அடித்து உங்கள் வீட்டிற்கே விரட்டி விடுவேன் என்று மிரட்டியதாகவும் தெரிகிறது. பின்னர் இதையே காரணமாக வைத்து மிரடியே 19 வயது இளம்பெண்ணை அவர் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இந்நிலையில் இளம்பெண் தற்போது 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்தப்போது இந்த விவரம் வெளியே தெரியவர குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அவரிடம் பெற்றோர் கேட்டப்போது தான் அக்கா கணவரின் கொடூரம் தெரியவந்தது.

இதனையடுத்து மகளை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பிணியாக்கியது குறித்து பெற்றோர் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் பேரில் இளம் பெண்ணின் அக்காள் கணவர் மீது வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

newstm.in

Next Story
Share it