1. Home
  2. தமிழ்நாடு

இறப்பிலும் பிரியாத அண்ணன், தங்கை.. குடும்பத்தினர் கதறல் !

இறப்பிலும் பிரியாத அண்ணன், தங்கை.. குடும்பத்தினர் கதறல் !


திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ஒளிமதி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவரது தங்கை அபிநயா. அண்ணன் - தங்கை இருவரும் மிகவும் பாச பிடிப்பு கொண்டவர்கள் ஆவர்.

இந்நிலையில் அண்ணன் மற்றும் தங்கை இருவரும் அருகில் உள்ள கிராமத்திற்கு உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருவரும் ஒன்றாக புறப்பட்டனர். ஆனந்தராஜ் தனது இருசக்கர வாகனத்தை ஓடினார். தங்கை அபிநயா பின்னாடி அமர்ந்திருந்தார்.

இருவரும் மன்னார்குடி அடுத்துள்ள வடபாதி சொக்கப்பெருமாள் கோவில் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக எதிரே வந்த லாரி மோதினர். லாரி மோதிய வேகத்தில் இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்கள்.

இறப்பிலும் பிரியாத அண்ணன், தங்கை.. குடும்பத்தினர் கதறல் !

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தலையாமங்கலம் போலீசார் விபத்தில் உயிரிழந்த இருவரையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்கான காரணம் குறித்து வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

எப்போதும் அண்ணன், தங்கை பாசப்பிடிப்புடன் காணப்படும் இருவரும் சடங்கு நிகழ்ச்சிக்குப் புறப்பட்டுச் சென்றபோது விபத்தில் இருவரும் ஒரே நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like