1. Home
  2. தமிழ்நாடு

அமெரிக்கா விதிக்கும் தடையை ஐ.நா. ஆதரிக்காது! அமெரிக்காவுக்கு அதிகாரமில்லை!

அமெரிக்கா விதிக்கும் தடையை ஐ.நா. ஆதரிக்காது! அமெரிக்காவுக்கு அதிகாரமில்லை!


அணுசக்தி ஒப்பந்தத்தை மீறியதாக குற்றம் சாட்டி அமெரிக்கா ஈரான் நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதித்திருப்பதாக சமீபத்தில் அறிவித்திருந்தது. இதனை 30 நாட்களில் மீண்டும் அமல்படுத்தப்படுத்தப் பட இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் தெரிவித்துள்ளார். ஆனால் இதுவரை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலோ, அந்த அமைப்பின் உறுப்பினா்களோ இது குறித்து எந்த தகவலும் வெளியிடவில்லை.

மேலும் ஒரு நாட்டின் ஒப்பந்த முறிவை செயல்படுத்த அறிவிப்பு மட்டுமே போதாது என்ற கருத்தையும் தெரிவித்துள்ளன. ஒப்பந்த முறிவுத் தீா்மானத்தின் அடிப்படையில் ஈரான் மீது மீண்டும் ஐ.நா. தடைகளை அமல்படுத்தினால் அதனை ஐ.நா. ஆதரிக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அணுசக்தி ஒப்பந்த நிபந்தனைகளை ஈரான் நிறைவேற்றத் தவறினால், ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள ஒவ்வொரு நாடும் ஈரான் மீது தடை விதிக்கலாம் என அமெரிக்கா விளக்கம் அளித்த நிலையில் அந்த உரிமையைப் பயன்படுத்த அமெரிக்காவுக்கு சட்டப்பூா்வ அதிகாரம் இல்லை என்று கூறப்படுகிறது.

newstm.in

Trending News

Latest News

You May Like