ஆமதாபாத் விமான விபத்து: பிரிட்டன் பிரதமர் இரங்கல்..!

பிரிட்டன் பிரதமர் கெயிர் ஸ்டார்மர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பிரிட்டனைச் சேர்ந்தவர்களுடன் லண்டனுக்கு கிளம்பிய விமானம், ஆமதாபாத்தில் நொறுங்கி விபத்துக்குள்ளானது பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. நிலைமை குறித்து தகவல் கிடைத்து வருகிறது. இந்த துயரமான நேரத்தில் பயணிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மீது எனது எண்ணங்கள் உள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
டில்லியில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது: விமான விபத்து குறித்து தகவல் கிடைத்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும், சம்பவம் குறித்து தெரிந்து கொள்ளவும் இந்திய அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுகிறோம். தூதரக உதவி தேவைப்படும் பிரிட்டன் நாட்டவர்கள் அல்லது நண்பர்களை பற்றி தெரிந்து கொள்ள 020 7008 5000 என்ற எண்ணை அழைக்கலாம் எனக்கூறியுள்ளது.