உச்சநீதிமன்றத்தின் புதிய நீதிபதிகளாக உஜ்ஜல் புயான், ஸ்ரீவெங்கட்ட நாராயணப்பட்டி பதவியேற்பு..!
தெலங்கானா உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி உஜ்ஜல் புயான், கேரள உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி எஸ்.வெங்கட்டநாராயண பாட்டீ ஆகிய இருவருக்கும் பதவி உயா்வு வழங்கி உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் கடந்த 5-ஆம் தேதி பரிந்துரைத்தது.இவ்விரு நீதிபதிகளும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக முறைப்படி பதவியேற்கும் நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 32-ஆக அதிகரிக்கும்.
இந்நிலையில் நேற்று இருவருக்கும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதன்மூலம் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது.