1. Home
  2. தமிழ்நாடு

சிவில் சர்வீஸ் தேர்வு காரணமாக யுஜிசி நெட் தேர்வு மாற்றம்..?

1

தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நடத்தும் நெட் தேர்வு ஆண்டுதோறும் இரண்டு முறை நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உதவி பேராசிரியராகப் பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கு மத்திய அரசின் உதவித் தொகை பெறவும் நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 

இந்த நிலையில் 2024-ம் ஆண்டுக்கான ஜூன் மாத அமர்வு 16-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில் தேர்வர்களின் கோரிக்கைக்கு இணங்க, ஜூன் 18=ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. 

நாடு முழுவதும் ஒரே நாளில், தேர்வு ஓஎம்ஆர் முறையில் நடைபெற உள்ளது. இதுகுறித்து தேசியத் தேர்வுகள் முகமை விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட உள்ளது. இந்த அறிவிப்பை யுஜிசி தலைவர் ஜெகதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

கூடுதல் விவரங்களுக்கு www.nta.ac.in , ugcnet@nta.ac.in என்ற இணையதள முகவரியைத் தொடர்பு கொள்ளலாம். தேர்வர்கள் 011 40759000 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு தங்களின் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம்.


 

Trending News

Latest News

You May Like