1. Home
  2. தமிழ்நாடு

இன்று துணை முதல்வராக பதவியேற்கிறார் உதயநிதி..!

1

தமிழகத்தின் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் இன்று பதவியேற்கிறார். உதயநிதி துணை முதல்வராவதற்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்த நிலையில் இன்று பதவியேற்பு விழா நடைபெறுகிறது.

கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி தமிழக அமைச்சரவையில் 6 அமைச்சர்களில் இலாக்கக்ககள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் துணை முதலமமைச்சராக உதயநிதி ஸ்டாலின் அறிவிக்கப்பட்டுள்ளார்.  உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, வனத்துறை அமைச்சகராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மெய்யநாதன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, கயல்விழி செல்வராஜ் மனிதவள மேம்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. மதிவேந்தன்- ஆதிதிராவிடர் நலத்துறை, ராஜகண்ணப்பன்- காதி மற்றும் பால்வளத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. தங்கம் தென்னரசுக்கு-நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சர் ஆகிறார். அவருக்கான இலாக்கா பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், கே.ராமச்சந்திரன் ஆகியோர் தமிழக அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். புதிய அமைச்சர்களின் பதவியேற்பு விழா இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறும் என கவர்னர் மாளிகை அறிவித்துள்ளது.

Trending News

Latest News

You May Like