1. Home
  2. தமிழ்நாடு

சும்மா இருந்தால் கூட எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்வார்கள் - உதயநிதி ஸ்டாலின்..!

1

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். காஞ்சிபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதாமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை தொடங்கி வைத்தார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 115வது பிறந்த நாளையொட்டி  கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஒரே நேரத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்டோருக்கு ஆயிரம் ரூபாயை வங்கி கணக்கில் செலுத்த முடியாது என்பதால் இந்த திட்டம் நேற்றே தொடங்கப்பட்டது.

mk stalin

இந்த நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது: மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்கப்படும்; தகுதியானவர்களுக்கு கண்டிப்பாக திட்டம் சென்றடையும். மக்கள் வரவேற்பு கிடைக்கும்போது, எதிர்க்கட்சிகள் சொல்வதை பொருட்படுத்த வேண்டாம். சும்மா இருந்தால் கூட எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்வார்கள். இவ்வாறு கூறினார். 

Trending News

Latest News

You May Like