பிரதமர் நரேந்திர மோடிக்கு திருவள்ளுவர் சிலையை நினைவுப் பரிசாக வழங்கிய உதயநிதி ஸ்டாலின்..!
ஜனவரி 19- ஆம் தேதி முதல் ஜனவரி 31- ஆம் தேதி வரை சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய நகரங்களில் கேலோ இந்தியா- 2024 போட்டிகள் நடைபெறவுள்ளன.
இந்த நிலையில், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டெல்லியில் உள்ள இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை இன்று (ஜன.04) மாலை 05.00 மணிக்கு நேரில் சந்தித்துப் பேசினார்.அப்போது, தமிழகத்தில் நடைபெறவுள்ள கேலோ இந்தியா போட்டியின் நிறைவு விழாவில் பங்கேற்க பிரதமருக்கு அழைப்பு விடுத்தார்.
அதைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள இல்லத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி எம்.பி., சோனியா காந்தி எம்.பி. ஆகியோரை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்துப் பேசினார்.இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “வெள்ள நிவாரண நிதியை உடனடியாக வழங்கக் கோரி, முதலமைச்சர் சார்பில் பிரதமரிடம் வலியுறுத்தினேன். ராகுல் காந்தியை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தேன்; அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு சிறிய அளவிலான திருவள்ளுவர் சிலையை நினைவுப் பரிசாக வழங்கினார்.