1. Home
  2. தமிழ்நாடு

இன்று அனிதாவின் நினைவு அஞ்சலி : ஓர் அண்ணனாக அவரை நினைவு கூர்கிறேன்- உதயநிதி ஸ்டாலின்

1

அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா நீட் தேர்வாள் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் அவரது 6-வது நினைவு தினம் இன்று தமிழ்நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி ட்பல்வேறு மாவட்டங்களில் திமுக மாணவர் அணி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் அனிதாவின் புகைப்படத்துக்கு அஞ்சலி செலுத்திவருகின்றனர்.

இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “நீட் ஒழிப்புப் போராளி தங்கை அனிதா நம்மை விட்டுப் பிரிந்து இன்றோடு வருடங்கள் ஆறு ஆகின்றன. ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும் தங்கை அனிதாவை நீட் தேர்வு கொலை செய்த வடு நம் மனதில் என்றும் இருக்கும். நீட் எனும் சமூக அநீதிக்கு எதிராக இறுதிவரை போராடிய தங்கை அனிதா மறைந்த இந்நாளில், ஓர் அண்ணனாக அவரை நினைவு கூர்கிறேன். நீட்டை நிரந்தரமாக நீக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை. அந்தநாள் நிச்சயம் வரும். நீட்டை ஒழித்து கட்டுவோம்.#BanNEET” எனக் குறிப்பிட்டுள்ளார்.


 


 

Trending News

Latest News

You May Like