1. Home
  2. தமிழ்நாடு

திமுக அரசால் தமிழ்நாடு நம்பர் 1 இடத்தில் உள்ளது - உதயநிதி ஸ்டாலின்..!

Q

துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருவண்ணாமலையில் திமுக வடக்கு மண்டல பூத் முகவர்கள் பயிற்சி முகாமில் பேசியதாவது:-
730 கோடி மகளிர் விடியல் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பெண்கள் கல்வி பயில மாதம் ரூ.1,000 வழங்கப்படுகிறது. இதன்மூலம் 8 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். 20 லட்சம் குழந்தைகள் காலை உணவு திட்டத்தால் பயனடைந்து வருகின்றனர். 1.15 கோடி மகளிர் 22 மாதங்களாக ரூ.1000 உரிமைத் தொகையை பெற்று வருகின்றனர். விடுபட்ட தகுதியான மகளிருக்கு இன்னும் 2 மாதங்களில் உரிமைத் தொகை வழங்கப்படும். திமுக அரசால் தமிழ்நாடு நம்பர் 1 இடத்தில் உள்ளது.
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுக தான் வெற்றி பெறப் போகிறது; பூத் முகவர்கள் ஒழுங்காக செயல்பட்டால் தான் கட்சி வெற்றி பெறும். அடுத்த 8 மாதங்கள் பூத் முகவர்களுக்கு மிகவும் முக்கியமான பணிகள் உள்ளன. பல கட்சிகள் பூத் முகவர்களையே போடாத நிலையில் டிஜிட்டல் முகவர்களை திமுக அமைத்துள்ளது.
ஒவ்வொரு அரசும் ஒவ்வொரு தன்மை கொண்டது. பா.ஜ.க அரசு என்றால் பாசிச மாடல் என்பார்கள், அ.தி.மு.க என்றால் அடிமை மாடல் என்பார்கள். நம் அரசை, நாம் பெருமையாக 'திராவிட மாடல்' என்கிறோம். அதற்கேற்றதுபோல, அனைவருக்குமான திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறோம். எடப்பாடி பழனிசாமி இப்போது காவி சாமி ஆகிவிட்டார். அண்ணா பெயரில் நடத்தும் கட்சியை சுயநலத்திற்காக அமித்ஷாவிடம் மொத்தமாக அடமானம் வைத்துவிட்டார். சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி டெபாசிட் இழக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Trending News

Latest News

You May Like