1. Home
  2. தமிழ்நாடு

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரூ.1 கோடி நிதி!

Q

தென்னிந்திய நடிகர் சங்கம் நடிகர் நாசர் தலைமையில் இயங்கி வருகிறது. சங்கத்தின் பொதுச் செயலாளராக நடிகர் விஷால், பொருளாளராக நடிகர் கார்த்தி ஆகியோர் உள்ளனர். நடிகர் சங்கத்திற்கான கட்டிடம் கட்டி முடிக்க வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாக இருக்கிறது. அதற்கான முயற்சிகளையும் இந்த சங்கம் முன்னெடுத்து வருகிறது. கட்டிடத்தை கட்டி முடிப்பதற்கு கிட்டத்தட்ட கோடிக்கணக்கான ரூபாய் செலவாகும் என முன்பு தெரிவிக்கப்பட்டது. சங்கத்தின் பொதுச் செயலாளராக இருக்கும் நடிகர் விஷால் கட்டிடத்தை முடித்துவிட்டுதான் திருமணம் செய்து கொள்வேன் என்றும் பல பேட்டிகளில் உறுதியாக கூறியிருக்கிறார்.
இந்த நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று அவரது முகாம் அலுவலகத்தில் தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளிடம், நடிகர் சங்க கட்டிடப் பணியைத் தொடர்வதற்காக சங்கத்துக்கு வைப்பு நிதியாக ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை தனது சொந்த நிதியில் இருந்து வழங்கியுள்ளார். இந்தப் புகைப்படத்தை நடிகர் விஷால் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்து, ‘தென்னிந்திய நடிகர் சங்கம் சீக்கிரம் கட்டி முடிக்க வேண்டும் என்பதற்காக உங்களுடைய பங்களிப்பிற்கும் அரசுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்’ என்று கூறியுள்ளார்.

Trending News

Latest News

You May Like