1. Home
  2. தமிழ்நாடு

தேர்தலில் வெற்றிபெற்ற வினேஷ் போகத்திற்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து..!

1

இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத். சமீபத்தில் மல்யுத்த போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த வினேஷ் போகத் அரசியலில் குதித்தார். காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட வினேஷ் போகத்திற்கு அரியானா சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை அக்கட்சி வழங்கியது. ஜூலானா தொகுதியில் போட்டியிட்ட வினேஷ் போகத் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் யோகேஷ் குமாரை விட 6 ஆயிரத்து 15 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இதன்மூலம் 19 ஆண்டுகளாக ஜூலானா தொகுதியில் தோல்வியை பார்த்து வந்த காங்கிரஸ் கட்சிக்கு வினேஷ் போகத் வெற்றியை தேடி கொடுத்துள்ளார்.

தேர்தலில் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வினேஷ் போகத்திற்கு தமிழ் நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்த எக்ஸ் தள பதிவில், “இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை மற்றும் அரியானாவின் ஜூலானா சட்டமன்றத் தொகுதியில் இருந்து வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வினேஷ் போகத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

மக்கள் பிரதிநிதியாக மக்கள் சேவையின் இந்த புதிய அத்தியாயத்தில் அவர் மகத்தான வெற்றி பெற வாழ்த்துகிறேன். பாசிச சக்திகளுக்கு எதிராக செயல்பட அவரது ஆற்றல் அவருக்கு உந்து சக்தியாக தொடரட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.


 


 

Trending News

Latest News

You May Like