1. Home
  2. தமிழ்நாடு

100 விளையாட்டு வீரர்களுக்கு அரசுப்பணி வழங்கப்படும் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!

1

விளையாட்டுத் துறை தொடர்பாக சட்டப்பேரவையில் அவர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

அதன்படி 24 சட்ட பேரவை தொகுதிகளில் ரூ.66 கோடி மதிப்பீட்டில் சிறு விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

“நாட்டிலேயே முதன்முறையாக சென்னை அருகே உள்ள மேலக்கோட்டையூர் பகுதியில் ‘ஒலிம்பிக் பைசைக்கிள் மோட்டார் கிராஸ்’ ஓடுபாதை அமைக்கப்படும்.

“கன்னியாகுமரியில் தமிழர் பாரம்பரிய தற்காப்பு கலைப்பயிற்சி, ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும். அம்மையத்தில் களரி, அடிமுறை, சிலம்பம், வர்மம் உள்ளிட்ட பாரம்பரிய தற்காப்பு கலைகளுக்கு பயிற்சி அளிக்கப்படும்,” என்றார் அமைச்சர் உதயநிதி.

மதுரை மாவட்ட விளையாட்டு வளாகத்தில் ஒலிம்பிக் தரப்பிலான நீச்சல் குளம் அமைக்கப்படும் என்றும் மாவட்ட விளையாட்டு வளாகங்களில் செயல்படும் உடற்பயிற்சிக் கூடங்கள் ரூ.10 கோடி மதிப்பீட்டில் குளிர் சாதன வசதியுடன் மேம்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

அனைத்துலக, தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெறும் தமிழகத்தைச் சேர்ந்த 100 வீரர்களுக்கு 3 விழுக்காடு இட ஒதுக்கீடு அடிப்படையில் அரசுப்பணி வழங்கப்படும்” என்றார் அமைச்சர் உதயநிதி.

Trending News

Latest News

You May Like