1. Home
  2. தமிழ்நாடு

13 லிருந்து 3வது இடத்திற்கு முன்னேறிய உதயநிதி... சட்டமன்றத்தில் புது இடம்..!

1

தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டின் இறுதி கூட்டத் தொடர் 2 நாட்கள் நடைபெறும் என கடந்த வாரம் நடைபெற்ற அலுவல் ஆய்வுக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி சபாநாயகர் அப்பாவு தலைமையில் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை 9:30 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில் கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று, மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் அண்மையில் உயிரிழந்த முக்கிய தலைவர்கள், ஆளுமைகளுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, சி.பி.எம். முன்னாள் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, ரத்தன் டாடா, எஸ்ரா சற்குணம், முரசொலி செல்வம் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தொடரில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு முதல் வரிசையில் மூன்றாவது இருக்க ஒதுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோருக்கு அடுத்தபடியாக உதயநிதி அமர்ந்துள்ளார்.

இளைஞர் நலம் மற்றும் விளையாடு மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்தபோது உதயநிதிக்கு முதல் வரிசையில் 13ஆவது இருக்க ஒதுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like