1. Home
  2. தமிழ்நாடு

உதயநிதிக்கு கொரோனா..? வெளியானது புதிய செய்தி..!

Q

உதயநிதி ஸ்டாலினுக்கு கடும் காய்ச்சல், தொடர் இருமல் தொற்று ஏற்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், அவர் பங்கேற்க இருந்த அரசு, கட்சி நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

 

மேலும், அவர் ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இதனால், அவரை கட்சியினர் யாரும் சந்திக்க வரவேண்டாம் என்று திமுக வட்டாரத்தில் அறிவுறுத்தப்பட்டது.

 

இந்நிலையில், கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், உதயநிதி உடல்நலம் குறித்து பல்வேறு செய்திகள் சமூக வலைதளங்களில் பரவியது. அதாவது அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், "உதயநிதிக்கு கொரோனா பாதிப்பு இல்லை. அவருக்கு தொற்று பாதிப்பு எனவும, அதன் காரணமாக அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் வதந்தி பரப்பப்படுகிறது" என கூறப்பட்டுள்ளது.

உதயநிதிக்கு காய்ச்சல் தவிர எந்த பாதிப்பும் இல்லை என சுகாதாரத்துறை விளக்கமளித்துள்ளது.

Trending News

Latest News

You May Like