ஹிந்தி திணிப்பை உதயநிதி நிரூபித்தால் 1 லட்ச ரூபாய் பரிசு..!

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், மாநில அரசுக்கு எதிராக போராட்டம் மேற்கொண்டார்.
போராட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் தேசிய கல்விக் கொள்கை புத்தகத்தை காட்டி இந்த தேசிய கல்விக் கொள்கையில் எங்காவது இந்தி திணிப்பு இடம்பெற்று இருக்கிறதா? என்பதை உதயநிதி ஸ்டாலின் நிரூபித்து விட்டால் அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் சன்மானம் வழங்க காத்திருக்கிறேன் என கூறினார்.
தமிழகத்தில் தமிழை வளர்க்க ஸ்டாலின் தலைமையிலான அரசு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை, தமிழக அரசு நிறுவன பெயர் பலகைகளில் தமிழ் இல்லை, உயர்நீதிமன்றத்திலே தமிழ் இல்லை, தமிழக அரசு நிர்வாகத்தில் தமிழ் இல்லை, எங்கு பார்த்தாலும் ஆங்கிலத்தில் தான் பெயர் உள்ளது.
அதனால் தமிழிலே பெயர் பலகை,கட்டாய தமிழ் பாட சட்டம் ஆகிய சட்டங்கள் நிறைவேற்ற வேண்டும். தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிடம் என்ற வார்த்தையை நீக்க வேண்டும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கும் திராவிடத்திற்கும் சம்பந்தமில்லை எனவே தமிழ்த்தாய் வாழ்த்தை மாற்றி அமைக்க வேண்டும்.பாரதியார் பாடிய பாடல் அல்லது மற்ற தமிழ் புலவர்கள் பாடிய பாடலை தமிழ் தாய் வாழ்த்தாக மாற்ற வேண்டும்.
தேசிய கல்விக் கொள்கையை தமிழில் இன்று வெளியிட்டுள்ளோம் புத்தகமாக வெளியிட்டுள்ள இதில் எங்காவது ஹிந்தி திணிப்பு என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளதா? என்பதை தயவு செய்து படித்து தெரிந்து கொள்ளுங்கள் இதில் இந்தி திணிப்பு என்ற வார்த்தையை உதயநிதி நிருபித்தால் அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் சன்மானமாக நாங்கள் தருகிறோம் என அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.
திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் மட்டும் மூன்று மொழிகள் தாராளமாக கற்றுத் தரப்படுகிறது ஆனால் ஏழை மாணவர்கள் தான் வஞ்சிக்கப்படுகிறார்கள் ஏழை மாணவர்கள் பற்றி அவர்களுக்கு அக்கறையில்லை என தெரிவித்தார்.
தமிழர்கள் நன்றாக படித்து விட்டால் கொடி பிடிக்க வரமாட்டான், சாராயம் குடிக்க வரமாட்டான், எனவே அவர்களை படிக்க வைக்காமல் இருப்பதற்காக ஆளும் கட்சிகள் செய்யும் சதி செயல் இது என அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.
தேசிய கல்வி கொள்கை பிரச்சனையை ஆரோக்கியமான விவாதமாக கொண்டு செல்லலாம். அதை விட்டுவிட்டு கெட் அவுட் மோடி என சொல்வது ஏற்கத்தக்கதல்ல. பெரியார் ஈவேரா இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்தவர் இந்த வரலாறு தற்போது கெட் அவுட் மோடி என சொல்பவர்களுக்கு தெரியுமா ? நீங்கள் ஒரு ஊரில் ஒரு மாநிலத்தின் கட்சி வைத்திருக்கிறீர்கள் ஆனால் உலகத்தின் மிகப்பெரிய அரசியல் கட்சி பிஜேபி உலகத்தின் தலைவர் நரேந்திர மோடி அவரை கெட் அவுட் என சொல்வது சரியா? அதற்கு பதிலடியாகத்தான் அண்ணாமலை கெட் அவுட் ஸ்டாலின் என தொடங்கி இருக்கிறார் என்று உலகத்தின் நம்பர் ஒன் ட்ரெண்டிங்கில் கெட் அவுட் ஸ்டாலின் உள்ளது.
இரு மொழிக் கொள்கை என்ற பெயரில் தமிழகத்தில் மம்மி டாடி என்ற வார்த்தைகள் திணிக்க முடிகிறது கர்நாடகாவில் திணிக்க முடியுமா? உதயநிதி தமிழக அரசியலை தரம் தாழ்ந்து கொண்டு போய்விட்டார் அதனால் தான் அண்ணாமலை அவரது பாணியிலேயே சென்று அவருக்கு பதிலடி கொடுத்து வருகிறார். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டுமென்றால் திமுகவை வீட்டுக்கு அனுப்பும் பணியில் அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும் எனவும் அர்ஜுன் சம்பத் வேண்டுகோள் விடுத்தார்.