உதகை மலை ரயில் சேவை ரத்து..!
ஊட்டி மலை ரயிலை கண்டு வியக்காத சுற்றுலா பயணிகள் இருக்க மாட்டார்கள். இந்த மலை ரயிலில் பயணம் செய்வது தனிச்சிறப்பு வாய்ந்த அனுபவமாகவே கருதப்படுகிறது.
காலை 7:10 மணிக்கு மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் இந்த ரயிலானது, மலைகளின் நடுவே 4:45 மணி நேரம் பயணித்து, கண்களுக்கு பசுமை நிறைந்த இயற்கையை விருந்தளித்து, உதகை வந்து அடைகிறது. இந்த ரயிலில் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை வரை செல்வதற்கு முதல் வகுப்பிற்கான கட்டணமாக 600 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. சாதாரண நடப்பு விலை பட்டியலாக மேட்டுப்பாளையம் வரை செல்வதற்கு 295 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் மேட்டுப்பாளையம் - உதகை பகுதிகளில் மலை ரயில் சேவை ரத்து என அறிவிப்பு.வெளியாகியுள்ளது.கனமழையால் ரயில் பாதையில் மண் சரிவு ,மேலும் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன .இதன் காரணமாக உதகை மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.