"அண்ணா மன்னிக்கவும்" தேடிப்போய் மன்னிப்பு கேட்ட உதயநிதி ஸ்டாலின் !

ஒத்த செருப்பு சைஸ் 7 என்ற திரைப்படத்தை, பார்த்திபன் ஒற்றை ஆளாய் நடித்து சாதனை படைத்தார். கடந்த ஆண்டு இந்தப் படம், கோவாவில் நடைபெற்ற தேசிய திரைப்படவிழாவில் திரையிடப்பட்டது.
இதனையடுத்து, இந்தியன் பனோரமா சார்பில் படத்திற்கு விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது.
இது குறித்து செய்தியைப் பதிவிட்ட தி.மு.க எம்.பி செந்தில் குமார், ‘அண்ணணுக்கு பா.ஜ.கல ஒரு சீட்டு பார்சல்’ என கிண்டலாக பதிவிட்ருந்தார். இதற்கு பார்த்திபன், தனது டுவிட்டர் பக்கத்தில் ‘இரவின் நிழல்’என்ற சவால்மிகு திரைப்படம் உருவாக்குவதைத் தவிர, வேறெந்த கட்சிக்குள்ளும் காட்சி தரும் எண்ணம் எனக்கில்லை என பதில் அளித்தார்.
மேலும், உண்மை மற்றும் நேர்மையான சுய சிந்தனையில், சுய வருமானத்தில் உருவான அந்த படத்திற்கு தகுதியின் அடிப்படையில் மட்டுமே விருது கிடைத்துள்ளது. அதை கொச்சைப்படுத்தினால் மனம் வலிக்கும். உரியது கிடைக்காத நிலையில், ஆனந்த மாய் தூக்கி எறிந்து விட்டு மேடை இறங்குவேனேத் தவிர, அதைத் தா இதைத் தா வென மரை முகமாக எனது முகம் மலரமாட்டேன் என இலக்கிய நயத்துடன் விளாசியிருந்தார்.
அரசியலில் மோதிப் பார்க்கலாம் என முடிவெடுத்து விட்டால் அதை பேராண்மையுடன் செய்வேன். உசுப்’பேத்தாதீங்க பாஸ், என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
மேலும், எனது அருமை நண்பர் உதயநிதி ஸ்டாலின் அச்செய்திக்கு வருத்தம் தெரிவித்து எனக்கு ஒலிப்பதிவு செய்துள்ளார். அதே கேட்டது முதல் கோப வார்த்தைகளை மேற்படி கோடிட்ட இடங்களாக மாற்றினேன் என தெரிவித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் இந்த பெருந்தன்மை, திரையுலகம் மட்டுமல்லாது அரசியலிலும் போற்றப்படுகிறது.