கஸ்தூரிக்கு ஸ்கெட்ச் போட்ட உதயநிதி ஸ்டாலின்.. விரைவில் இருக்கு..!!

ரஜினிக்கு பதிலடி கொடுத்த சின்ன தலைவரான இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், நடிகை கஸ்தூரியை சும்மா விடுவாரா என அவரது கட்சியின் திமுக ஐடி விங் மற்றும் இளைஞரணியினர் உற்சாகமடைந்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே ஏழை மக்களுக்கு உணவு வழங்கிய தனியார் அமைப்பை, திமுகவின் பஞ்சாயத்து தலைவரும், தி.மு.க. கிளை செயலாளருமான வேலுச்சாமி மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும் தனக்கு கணிசமாக உணவு பொட்டலங்களை கொடுக்க மிரட்டியதாக தகவல் பரவியது.
இந்த செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் மேற்கோள் காட்டிய கஸ்தூரி 'ஏழைகளுக்கு உணவு வழங்க, தினமும் நூற்று முப்பது உணவு பொட்டலங்களை, மாமூலாக கேட்டு மிரட்டிய தி.மு.க. கிளைச்செயலாளர்! - இது செய்தி.
தலைவர் அளவுக்கு என்றால், கோடி ரூபாய் கொடுக்க சொல்வார். இவர் அளவுக்கு, 130 சோத்து பொட்டலம் கேட்டிருக்காரு, இது குற்றமா?' என்று திமுகவை கிண்டலடித்திருக்கிறார்.
கஸ்தூரி திமுக தலைமையும் குறிப்பிட்டு கருத்து கூறியது தி.மு.க.வினருக்கு ஆத்திரத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியது.
எனவே அவருக்கு தக்க பதிலடி கொடுக்க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். அதன்படி இளைஞரணி மற்றும் தி.மு.க. இணையதள அணிக்கு அவர் வாய்மொழி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை கஸ்தூரியின் குழப்பமான அரசியல் ஸ்டேட்மெண்டுகளை எடுத்துப் போட்டு அவரை விமர்சியுங்கள். அரசியலில் எந்த இலக்கும் இல்லாம, வெற்று விளம்பரத்துக்காக அவர் பேசுவதை, நாகரிகமில்லாமல் விமர்சிப்பதை ஆதாரப்பூர்வமாக தாக்க வேண்டும் என்றும் உதயநிதி கூறியதாக கூறப்படுகிறது.
ஆனால் எந்த விமர்சனமா இருந்தாலும் நாகரிகமா செய்யுங்க. அநாகரிகமாகவோ, வரம்பு மீறியோ ஒரு வார்த்தை கூட பேசிட வேண்டாம்.' என்றும் அவர் உத்தரவிட்டுள்ளாராம். ஏற்கனவே ரஜினி திமுக தொடர்பாக கூறிய கருத்துக்கு உதயநிதி ஸ்டாலின் , அவரை கடுமையாக விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில் 23ம்தேதி சென்னையில் நடைபெறும் #CAA2019 எதிர்ப்பு பேரணியில் அனைவரும் பங்கெடுப்போம். உரிமைக்கான போராட்டத்தைக் கண்டு 'வன்முறை' என்று அஞ்சும் வசதியான, வயதான பெரியவர்களைச் சரியான பாதுகாப்புடன் வீட்டிலேயே விட்டுவரவும்.#Emergency2019 #IndiaAgainstCAA
— Udhay (@Udhaystalin) December 19, 2019
newstm.in