1. Home
  2. தமிழ்நாடு

சி.இ.ஓ பதவியை ராஜினாமா செய்தார் உதய் கோடக் ..!

1

 கோடக் மஹிந்திரா வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் பதவிகளை உதய் கோடக் ராஜினாமா செய்துள்ளார்.இயக்குநர்கள் குழுவின் தலைவர் பிரகாஷ் ஆப்தேவுக்கு ராஜினாமா கடிதம் எழுதிய உதய் கோடக், "உடனடியாக அமலுக்கு வரும் வகையில்" தனது ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டு கொண்டுள்ளார்.எனவே, செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் வகையில் கோடக் மஹிந்திரா வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி பதவிகளில் இருந்து உதய் கோடக் விலகியுள்ளார்.செப்டம்பர் 2ஆம் தேதி எக்ஸ்சேஞ்ச்களுக்கு அனுப்பிய செய்தி ஒன்றில் கோடக் மஹிந்திரா வங்கி இந்த தகவலை தெரிவித்துள்ளது.

எனினும், கோடக் வங்கியின் நிர்வாகமற்ற இயக்குநர் பதவியில் அவர் தொடர்வார் என்று அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.கோடக் மஹிந்திரா வங்கியின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக பணியாற்றி வந்த உதய் கோடக்கின் பதவிக்காலம் டிசம்பர் 31, 2023 அன்று முடிவடைகிறது.இந்நிலையில், பதிவிக்கலாம் முடிவதற்கு முன்பே அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.எனவே, ரிசர்வ் வங்கி மற்றும் வங்கி உறுப்பினர்களின் ஒப்புதலுக்கு உட்பட்டு, இணை நிர்வாக இயக்குனரான தீபக் குப்தா, டிசம்பர் 31-ம் தேதி வரை தற்காலிகமாக எம்.டி மற்றும் சி.இ.ஓ.வின் பணிகளை கவனித்து கொள்வார்.

Trending News

Latest News

You May Like