உபெர் நிறுவனத்தின் புதிய சேவை..! இனி ஒட்டகத்திலும் பயணம் செய்யலாம்..!
துபாய் பாலைவனத்தில் உபெர் ஆப்-ல் ஒட்டகம் புக் செய்து அதன்மீது ஏறிச்சென்ற பெண்ணின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
jetset.dubai என்ற இன்ஸ்டா முகவரியில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், துபாயின் பாலைவனப் பகுதியின் நடுவில் சிக்கித் தவிக்கும் இரண்டு பெண்கள், போக்குவரத்துக்காக கைப்பேசி மூலம் உபெர் பயன்பாட்டு செயலியில் கார்கள், மோட்டார் சைக்கிள்களுக்கு மத்தியில் எதிர்பாராதவிதமாக ஒட்டகத்தில் சவாரி மேற்கொள்ள ஆர்டர் செய்கின்றனர்.
அதன்படி, சில நிமிடங்களுக்குப் பின்னர், ஆண் ஒட்டகத்துடன் ஒருவர் அங்கு வருகிறார். அது, அந்தப் பயனரை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது. அல் படேயர், துபாய்-ஹட்டா வீதியில் படமாக்கப்பட்ட இந்தக் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மூன்று மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.