இருசக்கர வாகனம் மீது சரக்கு ஆட்டோ மோதி விபத்து!

பள்ளிப்பாளையத்தை அடுத்த தேவங்காபுரம் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் குமார், கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.
இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். பணி நிமித்தமாக திருச்செங்கோடு சென்ற அவர் மீண்டும் பள்ளிப்பாளையம் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியாக வந்த சரக்கு ஆட்டோ அவரது இருசக்கர வாகனம் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட ஆனந்த் குமார் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து வந்த பள்ளிப்பாளையம் போலீசார் உயிரிழந்தவரின் உடலை மீட்டு விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.