1. Home
  2. தமிழ்நாடு

கன்னியாகுமரியில் 2 வாலிபர்கள் வெறிச்செயல்..! காதலனை தாக்கி மாணவி பலாத்காரம்..!

1

கன்னியாகுமரி கடற்கரையில் அமர்ந்து கொண்டு நேற்று முன்தினம் இரவு ஒரு காதல் ஜோடி சிரித்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள், காதலனிடம் பேச்சு கொடுத்தனர். காதலனிடம் அந்த வாலிபர்கள், உங்களுடன் இருக்கும் அழகியுடன் நாங்கள் சந்தோசமாக இருக்க வேண்டும். எவ்வளவு பணம் வேண்டும் என கேட்டுள்ளனர்.

அதற்கு நாங்கள் இருவரும் காதல் ஜோடி. எனவே எங்களை விட்டு விடுங்கள் என காதலன் கெஞ்சியுள்ளார். ஆனால் வாலிபர்கள் அதனை பொருட்படுத்தவில்லை. அந்த இளம்பெண்ணை அனுபவிக்கும் ஆசையிலேயே குறியாக இருந்தபடி கேள்வி கணைகளை தொடுத்தனர்.

Rape

அந்த சமயத்தில் நான் உங்களுக்கு பணம் வேண்டுமானாலும் தருகிறேன் என வாலிபர்களிடம் காதலன் கூறியதோடு, வாலிபர்களில் ஒருவருக்கு கூகுள்பே மூலம் ரூ.10 ஆயிரமும் அனுப்பியுள்ளார். ஆனாலும் வாலிபர்கள் காதலனை தாக்கி விரட்டி விட்டு இளம்பெண்ணை மறைவான பகுதிக்கு தூக்கிச் சென்று பலாத்காரம் செய்தனர்.

இதற்கிடையே காதலன் ஓடிச்சென்று அருகில் உள்ள கிராமத்தில் இருந்து சிலரை அழைத்து வந்தார். அங்கு வந்து பார்த்தபோது இளம்பெண் அலங்கோலமான நிலையில் கதறி துடித்தார். பின்னர் இதுகுறித்து சுசீந்திரம் போலீசில் காதலன் புகார் கொடுத்தார்.

Suchindram PS

தகவலின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபர்கள் பள்ளம் வடக்குத்தெரு பகுதியை சேர்ந்த லியோராஜ் (34), பள்ளம் லூர்துகாலனி பகுதியை சேர்ந்த சகாய சீமோலியன் (34) ஆகிய 2 பேர் என்பது தெரியவந்தது. பின்னர் இருவரையும் அதிரடியாக கைது செய்தனர்.

பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண் 12-ம் வகுப்பு முடித்து விட்டு நீட் தேர்வுக்கு ஆயத்தமாகி உள்ளார். காதலன் பி.டெக் முடித்து விட்டு நாகர்கோவில் பொன்னப்ப நாடார் காலனி பகுதியில் உள்ள வீட்டில் தங்கியபடி ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்தநிலையில் இளம்பெண், சற்று மனநிலை பாதிக்கப்பட்ட தன்னுடைய சகோதரர் மற்றும் காதலனுடன் கடற்கரைக்கு சென்ற போது தான் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

Trending News

Latest News

You May Like