திருப்பூரில் கன்டெய்னர் லாரி மோதியதில் 2 பெண்கள் பலி..!

கன்டெய்னர் லாரி ஒன்று, திடீரென சாலையில் நின்றவர்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்தியது. இதில் 2 பெண்கள் உயிரிழந்து உள்ளனர்.
அவர்கள் இருவரும் கன்டெய்னர் லாரிக்கு அடியில் சிக்கி கொண்டனர். இதில் சம்பவ இடத்திலேயே அவர்கள் உயிரிழந்தனர். அவர்களின் உடல்களை மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்பின்னர் அவர்களுடைய உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் கன்டெய்னர் லாரி கவிழ்ந்தது. இதனால், அந்த பகுதியில் வாகன போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. அதனை சரி செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். அந்த பகுதியை கடந்து சென்ற மக்கள் சில மணிநேரம் வரை பெரிதும் பாதிக்கப்பட்டனர்.