20 கிலோ கஞ்சாவை ரயிலில் கடத்தி வந்த 2 பெண்கள் கைது..!
தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்து வருவதாக பல்வேறு அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டி வரும் நிலையில் இது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில் பயணிகளை சோதனை செய்த போது 20 கிலோ கஞ்சாவுடன் ஒடிசாவைச் சேர்ந்த 2 பெண்களை ரயில்வே போலீசார் கைது செய்து உள்ளனர். பூரி வாராந்திர விரைவு ரயிலில் வந்த அவர்கள் கஞ்சாவுடன் பிடிபட்டுள்ளனர்.ஒடிசாவைச் சேர்ந்த சரோஜினி, நளினி ஆகியோரிடம் இருந்து 20 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளது ரயில்வே போலீஸ். ஒடிசாவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து சென்னையில் யாரிடம் விற்பனை செய்ய வந்தார்கள் என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.