1. Home
  2. தமிழ்நாடு

பயங்கரவாதிகள் 2 பேர் என்கவுன்டர்; ராணுவம் அதிரடி..!

Q

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டனர். பைஸ்ரான், பஹல்காம், அனந்த்நாக் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு படையினர், போலீசார் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

மோப்ப நாய்கள், ட்ரோன் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ''பயங்கரவாதிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க, நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இறந்தவர்களின் உடல்களை மீட்ட மருத்துவ குழுக்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளன'' என ராணுவம் தெரிவித்துள்ளது.

நம்பர் பிளேட் இல்லாத பைக் ஒன்று ஸ்ரீநகரில் சிக்கியது என பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். டில்லியில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் கண்காணிப்பை போலீசார் தீவிரப்படுத்தினர்.

இந்த நிலையில், பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள சின்னாறு எல்லை பகுதியில் பாகிஸ்தானில் இருந்து 2 அல்லது 3 பேர் கொண்ட பயங்கரவாத கும்பல் இந்திய எல்லை பகுதிக்குள் ஊடுருவ முயன்றுள்ளனர். இதனை கண்ட ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இது குறித்து ராணுவம் தரப்பில் கூறுகையில், 'எல்லையில் தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இன்று இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். நிறைய ஆயுதங்களும், வெடிபொருட்களும் பயங்கரவாதிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது,' எனக் கூறப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like