1. Home
  2. தமிழ்நாடு

பெண்கள் குளிப்பதை படம் எடுத்த 2 மாணவர்கள் கைது..!

Q

செம்பட்டி அருகே வண்ணப்பட்டியில் வெள்ளைமாலை வீருமாரம்மன் கோவிலில் குலதெய்வ வழிபாட்டிற்காக திண்டுக்கல், தேனி உட்பட 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களை சேர்ந்த பலர் நேற்று முன்தினம் வந்தனர். இங்கு பெண்கள் குளிப்பதற்கென தற்காலிக தனி குளியலறை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அங்கு பெண்கள் குளிப்பதை, மொபைல் போனில் படம் எடுத்ததாக நால்வரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். அவர்களை செம்பட்டி போலீசார் விடுவித்துள்ளனர்.

இதை கண்டித்து திருவிழாவிற்கு வந்தவர்கள், அதிகாலை, 3:00 மணிக்கு செம்பட்டியில் குவிந்து, திண்டுக்கல் - குமுளி, மதுரை - பழநி நெடுஞ்சாலையின் குறுக்கே ரவுண்டானா பகுதியில் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் சமரசம் செய்த நிலையில், நால்வரையும் கைது செய்து, மொபைல் போனை பறிமுதல் செய்ய வலியுறுத்தி கோஷமிட்டனர்.

விழாக்குழு நிர்வாகி அளித்த புகாரின்படி, ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தினர்--. வண்ணம்பட்டியை சேர்ந்த 17 வயது பிளஸ் 2 மாணவர், கல்லுாரி மாணவர் நவீன், 20, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான, இவர்களின் நண்பர்கள் ஹரி, விஷ்ணுவை தேடுகின்றனர். அதிகாலை 3:00 மணிக்கு தொடங்கிய மறியல், காலை, 8:00 மணி வரை தொடர்ந்ததால், வெளியூர் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

Trending News

Latest News

You May Like