1. Home
  2. தமிழ்நாடு

கோவை உக்கடம் மேம்பாலத்தை இணைக்கக்கூடிய 2 ராம்ப்புகள் வரும் திங்கள் திறக்கப்படும்!

1

 கோவை உக்கடம்-ஆத்துப்பாலம் மேம்பாலத்தை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த மாதம் 9 ஆம் தேதி திறந்து வைத்தார்.

2018 முதல் நடைபெற்று வந்த இந்த மேம்பால பணிகள் ஜூலை மாதத்தில் நிறைவடைந்தது. ரூ.481.95 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்த 3.8 கிலோமீட்டர் நீள மேம்பாலத்தில் செல்லும் வாகனங்கள் சுங்கம் செல்வதற்கான ஏறு, இறங்குதளம் வாலாங்குளம் வழியே அமைக்கப்பட்டு வந்தது. அது மட்டும் திறப்பு விழாவின் போது முழுமை அடையாமல் இருந்தது. அதை ஆகஸ்ட் மாத இறுதிக்குள் முடித்திட திட்டமிட்டு பணிகள் வேகமாக நடைபெற்று வந்தன.

இந்நிலையில், சுங்கம் பைபாஸ் உடன் உக்கடம் மேம்பாலத்தை இணைக்கக்கூடிய ஏறுதளம், இறங்குதளத்தின் கட்டுமானப்பணிகள் தற்போது  நிறைவடைந்து உள்ளது. 
இந்த ஏறுதளம், இறங்குதளத்தில் மின் விளக்குக்களும் பொருத்தப்பட்டுள்ளன. இதை அடுத்து, வரும் திங்கள் (9.9.2024) வாகன ஓட்டிகள் பயன்படுத்த திறக்கப்படும் என மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இந்த மேம்பாலத்தின் மூலம் உக்கடம் - ஆத்துப்பாலம் சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். போக்குவரத்து நெரிசல் குறைந்ததுடன், அந்த வழியாக பொள்ளாச்சி சாலை, பாலக்காடு சாலை ஆகியவற்றை 7 நிமிடங்களில் கடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

Trending News

Latest News

You May Like