1. Home
  2. தமிழ்நாடு

2 விமானங்கள் நேருக்கு நேர் மோதியது..!

Q

புல்மேன் விமான நிலையத்தில் இருந்து 4 பேருடன் புறப்பட்ட சிறிய ரக விமானம், மொண்டானாவின் காலிஸ்பெல் சிட்டி விமான நிலையத்தில் நேற்று தரையிறங்கியது. உள்ளூர் நேரப்படி நேற்று பிற்பகல் 2 மணிக்கு தரையிறங்கும் போது, விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் தரையில் மோதி தீப்பிடித்தது.
தொடர்ந்து, விமான நிறுத்துமிடத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மற்றொரு பயணிகள் விமானம் மீது மோதியது. உடனடியாக சிறிய ரக விமானத்தில் பயணித்த 4 பேரும் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
விமான நிறுத்துமிடத்தில் நின்றுகொண்டிருந்த விமானங்களில் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Trending News

Latest News

You May Like