குட்டையில் மூழ்கி இருவர் பலி: நிவாரண நிதி அறிவித்த முதல்வர்..!

ஓசூரில் தனியார் குட்டையில் மூழ்கி 3ம் வகுப்பு படிக்கும் மாணவர் மற்றும் அவரை காப்பாற்ற சென்ற தலைமை ஆசிரியர் பலியாகினர்.
இந்நிலையில் இச்சம்பவம் அறிந்து வேதனையடைந்ததாக தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறியுள்ளார்.
மேலும், உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கும் தலா ரூ. 3 லட்சம் முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.