கேரளாவில் மேலும் இருவருக்கு நிபா வைரஸ் தொற்று உறுதி..!
கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த 24 வயது வாலிபர் நிபா வைரஸ் பாதிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பரிதாபமாக இறந்தார். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.
தொடர்பில் இருந்த 267 பேரில், அறிகுறியின் அடிப்படையில் ஆறு பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதில் இரண்டு பேருக்கும் நிபா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து 2 பேரும் மலப்புரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து, நிபா வைரஸ் பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வலுத்துள்ளது.