1. Home
  2. தமிழ்நாடு

பெரும் சோகம் : தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து- இருவர் பலி 3 பேருக்கு கை, கால்கள் துண்டிப்பு..!

1

புதுச்சேரியில் இருந்து 29 பயணிகளுடன் கோவை நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகேயுள்ள காளசமூத்திரம் அருகே சென்று கொண்டிருந்தபோது பயணிகள் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில் திடீரென சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தனியார் சொகுசு பேருந்தின் வலது புறம் அமர்ந்திருந்த முனியம்மாள் என்ற பெண் உட்பட இருவர் உயிரிழந்தனர். மேலும் 3 பேருக்கு கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கை, கால்கள் துண்டிக்கப்பட்டவர்கள் உட்பட ஏழு பேர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த இரண்டு கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் போலீசார் விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து வாகனத்தை மீட்டு போக்குவரத்தை சீரமைத்தனர். தொடர்ந்து விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய பேருந்து ஓட்டுநரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அதிகாலை நேரத்தில் தனியார் சொகுசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் இருவர் உயிரிழந்த நிலையில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like