1. Home
  2. தமிழ்நாடு

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு இரண்டு முக்கிய அறிவிப்புகள்..!

1

அரசு கொடுக்கும் மானியம் சரியான நபர்களுக்கு செல்வதை உறுதி செய்யும் வகையில் இந்த அறிவுறுத்தல்களை தமிழ்நாடு அரசு இரண்டு முக்கிய அறிவிப்புகளை கொடுத்திருக்கிறது. முதலாவது அறிவிப்பை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கொடுத்துள்ளார். அவர் கொடுத்திருக்கும் அறிவிப்பில், நியாயவிலைக் கடைகளுக்கு பொதுமக்கள் நேரில் சென்று தங்கள் ரேகையை பதிவு செய்ய (eKYC) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என அறிவுறுத்தியுள்ளார்.   

தூத்துக்குடி மாவட்டத்தில் நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் பெற்றுவரும் தகுதியுள்ள அனைத்து PHH/AAY குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள் அனைவரும் தங்களது கைரேகைகளை அருகில் உள்ள நியாய விலைக் கடைகளில் பதிவு செய்திட POS இயக்குநர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.   

வெளியூரில் / வெளி மாவட்டத்தில் தங்கி பணிபுரிந்துவரும் மற்றும் பள்ளிக் கல்லூரிகளில் படித்துவரும் மாணவ, மாணவிகள் தாங்கள் இருக்கும் ஊரிலுள்ள நியாயவிலைக் கடைகளுக்கு நேரில் சென்று தங்கள் ரேகையை பதிவு செய்ய (eKYC) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இத தொடர்பாக சிறப்பு முகாம்கள் மற்றும் தெருக்களில் வீடு வீடாக சென்று விரல் ரேகை பெறும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.   

தங்களது விரல் ரேகை பதிவுகளை பதிவு செய்த AAY/PHH குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏப்ரல் 2025 முதல் அத்தியாவசியப் பொருட்கள் தொடர்ந்து வழங்கப்படும். எனவே பொது மக்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

மற்றொரு அறிவிப்பை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் கொடுத்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்பட்டுவரும் ரேசன்கடைகளுக்கு கிட்டங்கிகளில் இருந்து வழங்கப்படும் உணவுப்பொருட்கள் எடை குறைவாக அனுப்பப்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிய வந்ததன் அடிப்படையில் புகார் கூறப்பட்ட கிட்டங்கிகளை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், கன்னியாகுமரி மண்டலத்தில் 6 வட்ட செயல்முறை கிடங்குகள் மூலம் அமுதம் நியாய விலைக்கடைகள் 150 மற்றும் கூட்டுறவுத்துறை கடைகள் 620 உட்பட 770 நியாய விலைக்கடைகளுக்கு உணவு பொருட்கள் அனுப்பப்பட்டு வருகிறது. 

மேற்படி கிடங்குகளில் இருந்து உணவுப்பொருட்கள் அடங்கிய மூட்டைகள் சமச்சீர் (Standardize) செய்து அந்தந்த மாத கலர்நூல்களை கொண்டு தைத்து எவ்வித குறைபாடுகளின்றி வழங்கப்பட்டுவருகிறது.மேலும் கூட்டுறவு துறைக்குட்பட்ட நியாய விலைக்கடைகளுக்கு அனுப்பப்படும் உணவுப்பொருட்கள் அத்துறையின் இயக்கப்பணியாளர்கள் முன்னிலையிலும் அமுதம் நியாய விலைக்கடைகளுக்கு அந்தந்த பகுதி அலுவலர்கள் முன்னிலையிலும் சமச்சீர் செய்யப்பட்டு அனுப்பப்பட்டு வருகிறது  

மேலும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் கோணம்-1, 2 மற்றும் காப்புக்காடு-1, 2 ஆகிய கிடங்குகளை ஆய்வு மேற்கொண்டு நியாய விலைக்கடைகளுக்கு அனுப்பப்படும் உணவுப்பொருட்கள் சரியான முறையில் அனுப்பப்படுவதை ஆய்வு செய்யப்பட்டது.  

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலைக்கடைகளுக்கும் உணவுப்பொருட்கள் எவ்வித தங்கு தடையின்றி எந்த ஒரு புகாருக்கும் இடமளிக்காத வகையில் சரியான அளவில் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.அதாவது நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் ரேஷன் கார்டு பொருட்கள் தொடர்பாக குறைகள் இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என குமரி மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.   

 

Trending News

Latest News

You May Like