1. Home
  2. தமிழ்நாடு

2 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சஸ்பெண்ட் !

Q

கேரளாவை சேர்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி கே. கோபாலகிருஷ்ணன், திருவனந்தபுரம் மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், வாட்ஸாப் செயலி பயன்பாட்டுக்கான, தன் மொபைல் எண்ணை யாரோ ஹேக் செய்துவிட்டதாகவும், அந்த எண்ணிலிருந்து பல்வேறு அதிகாரிகளைச் சேர்த்து,’ ஹிந்து கம்யூனிட்டி குரூப்’ என்ற பெயரில் வாட்ஸாப் குழு தவங்கி உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த விபரம் தெரியவந்ததும், அந்தக் குழுவை உடனடியாகக் கலைத்துவிட்டதாகவும் அந்த எண்ணிலிருந்து மல்லு ஹிந்து ஆபீசர்ஸ், மல்லு முஸ்லிம ஆபிசர்ஸ் னெ்ற பெயரிலும் குழுக்கள் துவக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டது.
அதிகாரிகள் விசாரணையில், கோபாலகிருஷ்ணன் மொபை் போன் ஹேக் செய்யப்படவில்லை என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரைச் சஸ்பெண்ட் செய்து மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.
அதேபோல், கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயதிலக்கை சமூக வலைதளம்மூலம் பிரசாந்த் விமர்சனம் செய்து வந்தார். மேலும் தனது உத்தரவுகளை மதிக்காத கீழ்நிலை அதிகாரிகளின் எதிர்காலத்தை ஜெயதிலக் சீர்குலைப்பதாகவும், அவரது மனநிலை சரியில்லை எனவும் பிரசாந்த் குற்றம்சாட்டியிருந்தார். இது தொடர்பாக ஜெயதிலக் புகார் அளித்து இருந்தார். இதனையடுத்து பிரசாந்த்தையும் மாநில அரசு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது.

Trending News

Latest News

You May Like