டிரம்ப் வெற்றியால் நடந்த இரண்டு பெரிய மாற்றம்..!
தங்கம் விலை படிப்படியாக உயர்ந்து செப்டம்பர் மாதம் ரூ.56 ஆயிரத்தை தொட்டது. அதன் பின்னரும் ஏற்ற, இறக்கத்துடன் நீடித்து வந்த நிலியைல், ரூ.57 ஆயிரம் ஆக அதிகரித்தது.
இதனிடையே இஸ்ரேல்- ஈரான் நாடுகளில் போர் பதற்றம், கச்சா எண்ணெய் விலை சரிவு, அமெரிக்க அதிபர் தேர்தல் போன்ற காரணங்களால் தங்கம் விலையில் பெரிய மாற்றம் கடந்த அக்டோபர் மாதத்தில் ஏற்பட்டது.
நவம்பர் பிறந்த போது, தங்கம் விலை ரூ.60 ஆயிரத்தை தாண்டும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தங்கம் விலை அதிரடியாக சரிய தொடங்கிகயது. சென்னையில் ஆபரண தங்கம் விலை நவம்பர் 1ம் தேதி அன்று ரூ.560 குறைந்து ரூ.59,080க்கு விற்பனையானது. ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.7,385க்கு விற்பனையானது. இந்நிலையில் நவம்பர் 2, நவம்பர் 3, நவம்பர் 4ம் தேதிகளில் தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் 7370 ரூபாய் ஆகவும், ஒரு பவுன் தங்கம் 58,960 ரூபாய் ஆகவும் இருந்தது. நவம்பர் 5ம் தேதியான நேற்று முன்தினம் தங்கம் விலை ஒரு கிராம் 7355 ரூபாய் ஆக சரிந்தது. இதனால் ஒரு பவுன் தங்கம் 58,840 ரூபாய் ஆக குறைந்தது. ஆனால் நேற்று (நவம்பர் 6ம் தேதி) தங்கம் விலை சற்று கூடியது. இதன்படி ஒரு கிராம் தங்கம் 7,365 ரூபாய் ஆகவும், ஒரு பவுன் தங்கம் விலை ரூ.58,920 ஆகவும் விற்பனை ஆனது.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் டிரம்ப் வெற்றி பெற்றார். இதன் காரணமாக பல பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் தங்கத்தில் இருந்து முதலீட்டை எடுத்து டாலரில் முதலீடு செய்தனர். இதனால் முன்எப்போதும் இல்லாத அளவிற்கு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தது. அடுத்தாக தற்போது தங்கம் விலையும் சரிந்துள்ளது.
சென்னையில் ஆபரண தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு 1320 ரூபாய் குறைந்துள்ளது. இதன் காரணமாக ஒரு சவரன் தங்கம் 57600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஒரு கிராம் தங்கம், 165 ரூபாய் குறைந்து 7200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளி விலை கிராமுக்கு 3 ரூபாய் குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.105 இல் இருந்து 102-க்கு சரிந்துள்ளது.