1. Home
  2. தமிழ்நாடு

அதிமுக பிரமுகர் படுகொலை வழக்கில் இருவர் கைது!

1

சங்கரன்கோவில் அடுத்த மேலநீலிதநல்லூர் பகுதியைச் சேர்ந்த வெளியப்பன் (அதிமுக பிரமுகர் ) வழக்கம்போல நடைபயிற்சி சென்றபோது மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த படுகொலையானது, கடந்த சில மாதங்களுக்கு முன்பு அப்பகுதியில் நடைபெற்ற கோவில் திருவிழாவின் போது ஏற்பட்ட மோதலின் காரணமாக முன் விரோதத்தால் நடைபெற்றிருக்கலாம் என்ற கோணத்தில் பாலமுருகன் என்பவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக தென்காசி மாவட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொலைக்கான காரணம் மற்றும் குற்றவாளிகள் பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் விசாரணையில் மேலநீலிதநல்லூர் பகுதியை சேர்ந்த, கொலை தொடர்பாக விசரணையில் இருக்கும் பாலமுருகனின் பெரியப்பா மகன் கோவேந்திரன் தரப்பினர், வெளியப்பனை கடந்த செப்.8ஆம் தேதி காலை நடை பயிற்சி சென்றபோது வழிமறித்து அரிவாளால் வெட்டியது தெரியவந்துள்ளது.

இதையடுத்து காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் பாலமுருகன், கோவேந்திரன் ஆகிய இருவரை பனவடலிசத்திரம் காவல் துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Trending News

Latest News

You May Like