1. Home
  2. தமிழ்நாடு

ஜம்பிங் சிக்கனுக்காக தவளைகளை கடத்திச் சென்ற இருவர் கைது..!

1

கோவாவில், 'ஜம்பிங் சிக்கன்' என்ற பெயரில், தவளைகளின் கால்களை வறுத்து கொடுக்கப்படும் உணவு பிரபலமாக உள்ளது. இந்த உணவுக்கு 'டிமாண்ட்' அதிகரித்துள்ளது.

கோவாவுக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டினர் விரும்பி சாப்பிடுகின்றனர். ஒரு சாப்பாடு 1,500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில், கார்வாரின் அங்கோலா வனப்பகுதியில் இருந்து, 'புல் பிராக்' என்ற அரிய வகை தவளைகளை பிடித்து, கோவாவிற்கு பஸ்சில் கடத்திச் செல்வதாக, கார்வார் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

கோவா தேசிய நெடுஞ்சாலையில், வனத்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த பஸ்சை மறித்தனர். பஸ்சுக்குள் ஏறி பயணியர் உடைமைகளை சோதனை செய்தனர்.

அப்போது இரு பயணியர் வைத்திருந்த பையில் இருந்த, 41 புல் பிராக் வகை தவளைகள் மீட்கப்பட்டன.

அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள், கோவாவின் சித்தேஷ் தேசாய், ஜானு லுலும் என்பதும், இறைச்சிக்காக தவளைகளை கடத்திச் சென்றதும் தெரிந்தது. தவளை கடத்தலில் வேறு யாருக்காவது தொடர்புள்ளதா என்றும் விசாரணை நடக்கிறது.

Trending News

Latest News

You May Like