வரும் 13ம் தேதி சென்னையில் தவெக சார்பில் ஆர்ப்பாட்டம்..?
மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் உயிரிழந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து தமிழக வெற்றி கழகம் சார்பில் சென்னையில் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. ஏற்கெனவே 3ம் தேதி போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டு பின்னர் இடம் கிடைக்காததால் 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ஆனால் அந்த தேதியிலும் காவல்துறை அனுமதி கொடுக்காத நிலையில், நீதிமன்றத்தில் இது தொடர்பாக தவெக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. போராட்டம் நடத்த காவல்துறைக்கு அனுமதி வழங்க உத்தரவிட கோரி மனுவில் தெரிவிக்கப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் வேறு தேதியை பரிந்துரைக்க அறிவுறுத்தியது. இந்நிலையில் வரும் 13ம் தேதி சென்னையில் தவெக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது... அதிகாரபூர்வ் அறிவிப்பு இன்னும் சிறிது நேரத்தில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது .
இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சித் தலைவர் விஜய் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த போராட்டத்தில், அஜித் குமார் மரண வழக்கை நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் உள்ளிட்ட விசயங்கள் குறித்து வலியுத்தப்பட உள்ளது.