1. Home
  2. தமிழ்நாடு

விரைவில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தவெக தலைவர் விஜய்?

1

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மார்ச் மாதம் முதல் வாரத்தில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யின் சுற்று பயணத்திற்கான முழு தரவுகளையும் ஆதவ் அர்ஜூனா தயார் செய்வதாக கூறப்படுகிறது.

தமிழகம் முழுவதும் மக்களை நேரடியாக சென்று சந்திக்க தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 2026 தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை எனவும் தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார். இன்னும் கூட்டணி குறித்து யாரிடமும் பேசவில்லை எனவும் விஜய் தெரிவித்துள்ளார்.

கூட்டணி குறித்து வரும் தகவல் அனைத்தும் பொய்யான தகவல்கள் எனவும் தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like