நாளை விவசாயிகளுக்கு விருந்து வைக்கும் தவெக தலைவர் விஜய்!

விக்கிரவாண்டியில் நடந்த தவெக மாநாட்டுக்கு நிலம் வழங்கியவர்களுக்கு சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் நாளை விருந்து வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தவெக மாநாட்டுக்கு நிலம் வழங்கியவர்களுக்கு மட்டுமின்றி பார்க்கிங் மற்றும் மாநாட்டு திடலுக்கு 230 ஏக்கர் நிலம் வரை விவசாயிகள், ரியல் எஸ்டேட் உரிமையாளர்களும் இந்த விருந்தில் கலந்து கொள்ளவுள்ளனர்.
சுமார் 25 பேரை சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு அழைத்து விஜய் கவுரவிக்கிறார் என்றும், நிலம் தந்தவர்களுக்கு தனது கைகளால் உணவு விஜய் பரிமாறுகிறார் என்றும் தவெக வட்டாரங்கள் கூறுகின்றன.
மாநாடு முடிந்ததும் நிலம் கொடுத்தவர்களை மறந்துவிட்டு நிலம் கொடுத்தவர்களுக்கு பணம் கூட கொடுக்காமல் ஏமாற்றும் அரசியல் கட்சிகள் இருக்கும் நிலையில் இடம் கொடுத்தவர்களுக்கு விருந்து வைக்கும் விஜய் வித்தியாசமான அரசியல்வாதியாக பார்க்கப்படுகிறார்.
நாளை, வி.சாலை நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் 100க்கணக்கானோர் அவர்கள் குடும்பத்துடன் இந்த விருந்தில் கலந்து கொள்ள உள்ளனர் என்றும், இதற்கான பேருந்து ஏற்பாடுகளையும் தவெக கட்சியினர் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நாளை காலை 10 மணியளவில் இந்த விருந்து நிகழ்வு நடைபெற உள்ளது.