1. Home
  2. தமிழ்நாடு

தவெக தலைவர் விஜய் அதிரடி மூவ் : வக்ஃபு சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல்..!

1

வக்ஃபு திருத்தச் சட்ட மசோதா கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கு அனுப்பப்பட்டது. நிலைக்குழுவானது வக்ஃபு வாரிய மசோதாவில் 44 திருத்தங்கள் செய்யப்பட்ட 655 பக்க அறிக்கையை சமர்ப்பித்தது. இதனையடுத்து, வக்ஃபு திருத்தச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, பாஜக கூட்டணி எம்.பி.க்கள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

தமிழகத்தில் இருந்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தவிர யாரும் வக்ஃபு வாரிய மசோதாவிற்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை. வக்ஃபு மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து சட்டமாக அமலானது. வக்ஃபு சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ், திமுக உள்பட எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.


இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் சார்பில் வக்ஃபு திருத்த சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதேபோல இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜாவும் வழக்கு தொடர்ந்துள்ளார். வக்ஃபு திருத்தச் சட்டத்திற்கு எதிரான அனைத்து வழக்குகளும் ஒன்றாக இணைக்கப்பட்டு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தவெக கட்சியை தொடங்கியுள்ள விஜய்யை பொறுத்த வரை, இஸ்லாமிய மக்களுடன் இணக்கம் காட்டி வருகிறார். கடந்த மாதம் சென்னை ராயப்பேட்டையில் நடந்த இப்தார் நோன்பு திறப்பு நிகழ்வில் குல்லா அணிந்தபடி கலந்துகொண்டார். வக்ஃபு திருத்தச் சட்டத்திற்கு எதிராக கடந்த வாரம் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் பல இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. அப்போது விஜய் வெளியிட்ட அறிக்கையில், ஜனநாயகத்திற்கு விரோதமான வக்ஃபு திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like